கட்டான – ஹல்பே – கோபியவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த தொழிற்சாலையின் நிர்வாக பணிப்பாளர் இலங்கையை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளார்.
ஐந்து பேர் கொண்ட குழுவொன்று தொழிற்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கிய பின்னர் அவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் ஓமன் நாட்டவரான நிர்வாக பணிப்பாளரையும் தாக்கியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் செயற்பட்டதாகக் கூறப்படும் குறிந்த இனந்தெரியாத கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஓமானின் ஆடைத் தொடரின் சகோதர நிறுவனமான அவரது ஆடைத் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஓமானிய வர்த்தகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகடெமான்றுதெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பில் இதுவரை நியாயமான விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் தொழிற்சாலையை மூடிவிட்டு இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என ஓமானிய தொழிற்சாலை உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.