களுத்துறை மாணவி மரணம்: சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்!

Date:

களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து வீழ்ந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சம்பவ தினத்தன்று மாணவியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.

எனினும், அவரது தொலைபேசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவி உயிரிழந்ததையடுத்து பிரதான சந்தேகநபர், முன்னதாக விடுதியிலிருந்து சென்ற தமது நண்பரையும், நண்பரின் காதலியையும் மீண்டும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து, மாணவியின் தொலைபேசியை பாதைக்கு அருகிலுள்ள கால்வாய் நோக்கி வீசியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல உண்மைகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மாணவி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் இருந்த போது குறித்த சிறுமிக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், நான் இன்று வீட்டிற்கு சென்றால் மாட்டிக்கொள்ள போகிறேன் என்று அவர் கூறியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குறித்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப்...

தவணைப் பரீட்சை நடத்தப்படாது: கல்வி அமைச்சு

2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம்...