எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பான விவாதத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் பாராளுமன்ற அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் தொடர்பில் விவாதம் நடத்துவதா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.