உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு தொடர்பான அறிவித்தல்!

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் 6 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன் ஏனைய பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 10 மத்திய நிலையங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை அதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் மதிப்பீட்டின் போது செயன்முறை பரீட்சைகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...