துருக்கி ஜனாதிபதித் தேர்தல்: வாக்குப் பதிவுகள் தீவிரம்

Date:

துருக்கியில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜப் தையிப் அர்தூகான் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கெமல் கிலிக்டரொலு என்ற பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.

கிலிக்டரொலு  வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் தேர்தலில் யாரேனும் ஒரு வேட்பாளர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும்.

அவ்வாறு பெரும்பான்மையை பெறவில்லை என்றால் வரும் 28ஆம் திகதி  மீண்டும் தேர்தல் நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

துருக்கியில் 20 ஆண்டுகள் எர்டோகன் ஆட்சி செய்த நிலையில் இந்த முறை நடைபெறும் தேர்தலில் அவர் தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...