காஷ்மீரில் G-20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு!

Date:

2023 ஆம் ஆண்டு G20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி, G20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.

டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில், G20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் நாளை மறுதினம் ஆரம்பமாகி மூன்று நாட்கள் (22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் G20 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் G20 அமைப்பில் உறுப்பினராக உள்ள சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

பிரச்சினைக்குரிய பகுதியில் மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ள சீனா இந்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில் எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் G20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது, என தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நடைபெறும் G20 மாநாட்டில் சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன நிலையில் துருக்கியும் காஷ்மீர் G20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், சவுதி அரேபியாவும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...