பருவச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

Date:

இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பருவச் சீட்டுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கட்டண அதிகரிப்புக்கு அமையவே, பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளை இல்லாது செய்வதா? அல்லது தொடர்வதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...