ஜப்பானிய பிரதமரிடம் மன்னிப்பு கோரினார் இலங்கை ஜனாதிபதி !

Date:

ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் தமது மன்னிப்பை கோரியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்கொணரப்பட்ட இந்த திட்டம், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஒரு தலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டது.

இந்தநிலையில் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதேவேளை டோக்கியோவில் நடைபெற்ற மற்றுமொரு சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய நிதியமைச்சரை சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார்.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...