உயர்தர விடைத்தாள் மதிப்பீடு மீண்டும் சிக்கலில்!

Date:

உயர்தர விடைத்தாள் மதிப்பீடுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடி அதற்குக் காரணமாக உள்ளது. பத்தொன்பதாயிரம் ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்காகக் கோரிய முன்பணத்தை இதுவரை திணைக்களத்தினால் செலுத்த முடியவில்லை.

ஒரு பகுதியினருக்கு மட்டுமே முன்பணம் செலுத்த முடிந்ததன் காரணமாக, முன்பணம் பெறாதவர்கள் நேற்று (26) மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகினர்.

முற்பணம் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் இவர்கள் மீண்டும் மதிப்பீடுகளுக்காக இணைந்துள்ளனர். ஆனால், முன்பணம் வழங்க, துறையிடம் பணம் இல்லை என, குறித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அறுபத்து மூன்று பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு பன்னிரெண்டு பாடங்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்படவில்லை அல்லது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...