துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் இன்று மீண்டும் வாக்குப்பதிவு!

Date:

துருக்கியில் கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் தற்போதைய ஜனாதிபதி தையீப் அர்தூகானும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.

துருக்கியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது.

இதில் அர்தூகான் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28ஆம் திகதி (இன்று) அதிபர் தேர்தலின் 2ஆவது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று துருக்கியில் ஜனாதிபதித் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அர்தூகான் கடந்த 2003-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு 20 ஆண்டுக்கு பிறகு ஜனாதிபதித் தேர்தல் நடந்து வருகிறது.

அர்தூகானுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார்.

அவர் அர்தூகானுக்கு கடும் சவால் அளித்து வருகிறார். 2003 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த அர்தூகான், அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமான ஜனாதிபதி பதவியை கொண்டு வந்தார்.

அவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...