இலங்கையின் மூத்த இராஜதந்திரி ஜயந்த தனபால காலமானார்!

Date:

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் .

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றினார்.

மேவேளை ஜயந்த தனபால 1998-2003 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார்.

இவர் 30/12/1938 அன்று கண்டியில் பிறந்தார், மத்திய மாகாணத்தின் மாத்தளையில் மிக முக்கியமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

தனது அடிப்படைக் கல்வியை கண்டி திரித்துவக் கல்லூரியிலும் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

இளம் வயதிலேயே இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைந்து, லண்டன், பெய்ஜிங், வாஷிங்டன், புதுடெல்லி, ஜெனிவா ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், 1995ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...