வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியை உண்ண வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் கால்நடைகளுக்கு “லம்பி ஸ்கின் நோய்” எனப்படும் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்வதையும், அங்கிருந்து செல்வதையும் தடை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவும் குறித்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் படி, மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 34 கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளது.

இந்நோயானது மாடுகளின் பால் விளைச்சலில் குறைவை ஏற்படுத்துகிறது, ஆனால் மூன்று வாரங்களில் குணப்படுத்த முடியும் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தோல் நோய் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...