ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு தாமரை கோபுரம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பல அரச நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், நோர்த் சீ லிமிடெட், இலங்கை த்ரிபோஷ லிமிடெட், கலோயா பிளான்டேஷன் (பிரைவேட்) நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், பரந்தன் இரசாயன நிறுவனம் ஆகியவையும் நிதி அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44 வது பிரிவின் பத்தி (1) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மே 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச தலைவரால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.