இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!

Date:

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு, 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 225 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய், 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபாவுக்கும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 299 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், நெத்தலி கிலோ ஒன்றின் விலை 1,140 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 200 ரூபாவாகவும் குறைக்கப்பட உள்ளன.

சோயா மீட் கிலோ ஒன்றின் விலை 650 ரூபாவாகவும், சிவப்பு அரிசி கிலோ ஒன்றின் விலை 139 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 540 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...