பல்துறை ஆளுமை கொண்ட கலைவாதி கலீல் காலமானார்!

Date:

 தாஜுல்உலூம் கலைவாதி கலீல் அவர்கள் இன்று அதிகாலை காலமானார்,
கலைவாதி கலீல் எழுத்தாளராக, கவிஞராக, ஓவியராக, நூலாசிரியராக, ஒலிபரப்பாளராக, விமர்சகராக, நடிகராக, ஊடகவியலாளராக, உதவி ஆசிரியராக, உதவி அதிபராக கடமையாற்றி பன்முக ஆளுமை கொண்ட ஒரு இலக்கியவாதியாவார்.

பல பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் இலக்கியப் பயணத்திலிருந்து இவர் இன்னும் ஓய்வு பெறவில்லை.

கலைவாதி கலீல் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்சமயம் பாணந்துறையில் வசிக்கின்றார். இவர் ஆரம்பத்தில் மதாறு முஹைதீன் முஹம்மது கலீல் என்ற பெயரில்தான் எழுத ஆரம்பித்தார். பின்னர் சர்தார், புரட்சிக் கவிஞன், மன்னிநகர் கலீல், மன்னாரான், புரட்சிதாசன் ஆகிய புனை பெயர்களிலும் இலக்கியம் படைத்தார்.

கலைவாதி கலீல் முறைப்படி ஓவியமும் கற்றவர். ஓவியங்களை வரையும் போது இவர் சிறந்த ஓவியராகி விடுகிறார். கவிதைகளை எழுதும் போது இவர் கவிஞராகி விடுகிறார். விளையாட்டுச் செய்திகளை எழுதும் போது இவர் விளையாட்டு வீரராகி விடுகிறார். இவ்வாறு தான் தொட்ட துறையில் சிறந்து விளங்கும் கலைவாதி கலீல் பல நூல்களுக்கும் சொந்தக்காரர்.

பல்துறை ஆளுமை கொண்ட அவர் நடமாடும் ஓர் இலக்கியக் களஞ்சியமாவார். இலங்கை இலக்கிய பரப்பிலே இலக்கிய முத்தாகவும், இலக்கிய சொத்தாகவும் திகழ்கிறார். இளம் எழுத்தாளர்கள் பலருக்கு களமளித்தவர் அவர்.அ ணிந்துரை, ஆசியுரை என அள்ளி வீசியவர்.

உங்கள் அத்தனை நற்செயல்களையும் இறைவன் ஏற்றுக் கொள்வானாக! உங்கள் பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை தருவானாக !

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...