இலங்கையில் ஐந்தில் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களில் வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கான வரிகளை டொலரில் செலுத்தும் முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2015 முதல் 2020 வரை 2,498,714 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
2015 – 652,446 வாகனங்கள்
2016 – 466,986 வாகனங்கள்
2017 – 448,320 வாகனங்கள்
2018 – 496,282 வாகனங்கள்
2019 – 332,452 வாகனங்கள்
2020 – 102,228 வாகனங்கள்