இலங்கையில் 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இது மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் 33 வீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பற்ற 23 நாடுகளில் இலங்கை 20ஆவது இடத்தில் உள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 57 இலட்சம் குடும்பங்களில் 37 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் ஏதாவது ஒரு உதவியை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மொத்தக் குடும்பங்களில் 65 வீதமான குடும்பங்கள் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்தார்.