தயாராகும் புதிய தொழிலாளர் சட்டமூலத்துக்கான பிரேரணை!

Date:

தற்போதைய தொழிலாளர் சட்டத்தின் குறைபாடுகளை திருத்தும் வகையில் புதிய தொழிலாளர் சட்டமூலத்துக்கான பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலத்தை தொழிலாளர் ஆலோசனை சபையில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, இதனைத் தெரிவித்தார்.

இப்பிரேரணையின்படி ஆட்சேர்ப்பு அல்லது பணியிடத்தில் ஓர் ஊழியருக்கு எதிரான பாகுபாட்டை தடுக்க சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பணியாளர்கள், அனைத்துப் பணியிட துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துதல், பின்னர் ஊழியர்களின் விருப்பத்துக்கேற்ப 5 நாள் வாரம் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்துதல், பகுதிநேர வேலையில் ஈடுபடுவதற்கு தொடர்புடைய சட்ட விதிகளை உருவாக்குதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சட்டம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தொழிலாளர் சட்ட மாதிரி, தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சட்டமாக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...