இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு!

Date:

இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் தெரிவித்துள்ளார்.

வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்க செய்தியாளர் மாநாட்டில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

வாகனங்களுக்கான இறக்குமதித் தடை இவ்வாண்டுகள் நீக்கப்பட மாட்டாது அத்துடன் தற்போது சுமார் 900 பொருட்களுக்கான இறக்குமதித்தடை தொடர்ந்தும் காணப்படுகிறது.

இவற்றில் 300 பொருட்கள் வாகனங்களுடன் தொடர்புடையவையாகும். எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால் அது சர்வதேச சந்தையில் கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...