உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்..
உள்நாட்டு கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும், உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பான உணர்திறனை மேலும் வலியுறுத்தியதுடன், இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் அணுகுவதாக உறுதியளித்தார்.
இலங்கையின் வங்கி மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.