போரில் காயமடைந்த சிரியாவைச் சேர்ந்த 500 பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணம்!

Date:

போரில் காயமடைந்த சிரியா நாட்டைச் சேர்ந்த 500 பேர் இந்த வருடம் 2023 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.
இவர்களுக்கான செலவுகளை சவூதி அரேபியாவைச் சேர்ந்த, ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நபர் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் போரில் காயமடைந்த சுமார் 500 சிரிய யாத்திரிகர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

அவர்களின் பயணம் மற்றும் தங்குமிட செலவுகள், அத்துடன் பயண ஆவணங்கள் மற்றும் ஹஜ் அனுமதிகளை அவர் பொறுப்பேற்றுள்ளார்.

இதேவேளை  நான் என் கால்களை இழந்தேன், ஆனால் அவரது புனித கஃபாவை பார்வையிடும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு ஈடுசெய்தான் என்று சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள அட்மே முகாமில் வசிக்கும் எட்டு குழந்தைகளின் தந்தை இஸ்மாயில் அல்-மஸ்ரி கூறினார்.

நேற்றைய கனவு இன்று நனவாகியுள்ளது. நான் கஃபாவின் அருகே என் ஒற்றைக் காலில் நின்று அல்லாஹ்வின் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறுவேன். நான் இழந்த பாதத்திற்கு சொர்க்கத்தில் சிறந்ததை நஷ்டஈடாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” என்று அல்-மஸ்ரி கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...