புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் மெப்ஸ்!

Date:

உலகளவில் பெருமளவிளான மக்களால் பயன்படுத்தப்படும் இணையவழி வரிப்படமாக கூகுள் மெப்ஸ் இருந்து வருகிறது.

இந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனமானது பயனர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் முதலாவதாக,  பொதுவாக மெப் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது.

இதனைகருத்திற்கொண்டு தற்போது வரைப்படத்தை சேமித்து வைத்து இணையவசதி இல்லாத சந்தர்ப்பத்தில் இதை மீள் உபயோகம் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் தொலைபேசி சேமிப்பில் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் வரைப்படத்தை அகற்றிகொள்ளவும் முடியும்.

அடுத்ததாக வீதியில் வாகன நெரிசலை கருத்திற்கொண்டு வேறு பாதையை பரிந்துரை செய்வதோடு அந்தந்த வாகனங்களுக்கு ஏற்றவிதமான பாதையையும் பரிந்துரை செய்யும்.

இதேவேளை ஒரு குறித்த பிரதேசத்தில் வாகன நெரிசல் தொடர்பாக நிகழ்நிலை தகவல்களை(Real time updates) வழங்கும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கட்டணச்சாலைகள், தடைசெய்யப்பட்ட சாலை மற்றும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்ட சாலை தொடர்பான விடயங்களையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகத்தை அளவிடும் காட்டியாகவும் இது தொழிற்படுகிறது.

உதாரணமாக ஒரு குறித்த வீதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது எச்சரிக்கை சமிக்ஞை தெரிவிக்கும்.

வரைப்படத்தை மற்றோரு நபருக்கு பகிரும்போது புறப்பட்ட நேரம் வந்தடையும் நேரம் தொலைபேசியின் (battery percentage) உட்பட்ட அனைத்தும் பகிரப்படும். இந்த அம்சம் பாதுகாப்பு நோக்கத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...