மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம்!

Date:

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மாதம் 09 முதல் இது ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (ஏஏஎஸ்எல் ) நேற்று(26.06.2023) உறுதிப்படுத்தியுள்ளது.

ஏஏஎஸ்எல் இன் தகவலின்படி, தாய் ஏர் ஏசியா பிரபலமான பாங்கொக் முதல் கொழும்பு வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு முறை மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கும்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தினசரி 18,000-19,000 பயணிகளும் 110-120 விமானங்களும் சேவையில் உள்ளதாக விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தெரிவித்துள்ளது.

“சர்வதேச விமான நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படுவதையும், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைகிறது” என்று விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) மேலும் கூறியது.

இதேவேளை கத்தாரின் விமான நிறுவனமான,  கத்தார் ஏர்வேஸ் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...