சவூதி அரேபிய மன்னரின் ‘ஹஜ் விருந்தாளிகள் திட்டம்’: (கலாநிதி M.H.M.Azhar (PhD))

Date:

ஹஜ் இஸ்லாத்தின் கடமைகளில் ஒரு முக்கிய கடமையாகும். இதைக் கொண்டே இஸ்லாமிய கடமைகளின் வரிசையும் நிறைவு பெறுகிறது.

இம் மேலான கடமையை நிறைவு செய்யும் பொருட்டு சவூதி அரேபியாவின் திட்டங்களும் அந்நாட்டின் சலுகைகள் தொடர்பிலும் விவரிக்கும் கட்டுரையை வாசகர்களுக்கு தருகின்றோம்.

இஸ்லாம் ஐந்து பிரதான தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது, அந்த ஒவ்வொரு தூணும் இஸ்லாத்தின் ஒவ்வொரு கடமையையும் பிரதிபலிக்கின்றது, அந்த அடிப்படையில் அதன் இறுதிக் கடமை ஹஜ் கடமையாகும்.

ஹஜ் கடமை பண வசதியும் உடல் வலிமையுமுள்ள பருவமடைந்த முஸ்லிம்களின் மீது அவர்களின் வாழ்நாளில் ஒரு முறை நிறைவேற்றுவது கடமையாகும்.

இந்த நிபந்தனைகளுக்கு உட்படாதவர்களுக்கு ஹஜ் கடமையாக மாட்டாது. ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்று பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் சவூதி மன்னரின் ஹஜ்ஜுக்கான விருந்தாளிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு ஹஜ் செய்வதே மிக சொகுசு ஹஜ்ஜாகும், இக்கட்டுரையில் அது தொடர்பான சில குறிப்புகளே வழங்கப்படவிருக்கிறன.

சவூதி அரேபியா மன்னரின் ஹஜ் விருந்தாளிகள் யார்?

சவூதி அரேபிய அரசாங்கத்தின் செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சவூதி அல்லாத வேறு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே சவூதி அரேபியா மன்னரின் ஹஜ் விருந்தாளிகள் ஆவார்கள்.

ஆரம்பம்:

இத்திட்டமானது சவூதி அரேபியாவை மன்னர் ஃபஹ்த் பின் அப்தில் அஸீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது ஹிஜ்ரி 1417 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த திட்டம் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சினூடாக நிறைவேற்றப்படுகின்றது.

சலுகைகள்:

இத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டவர்கள் பின்வரும் சலுகைகளை இலவசமாக பெற்றுக் கொள்வார்கள்:
1- விமானப் பயணச்சீட்டு
2- ஹஜ்ஜுக்கான அனுமதி (வீசா)
3- சவூதி அரேபியாவினுள் போக்குவரத்து சேவைகள்
4- தங்குமிட வசதிகள்
5- உணவு
6- மருந்து மற்றும் சிகிச்சை
7- அத்தியவசியப் பொருட்கள் உள்ளடங்கிய ஒரு பை
8- ஸம்ஸம் நீர்
9- அல்குர்ஆன் மற்றும் அதன் மொழிபெயர்ப்பு!
10- ஹஜ்ஜுடன் தொடர்புபட்ட புத்தகங்களும் வழிகாட்டலும்.
11- மக்கா மற்றும் மதீனாவில் அமைந்துள்ள முக்கியமான சில இடங்களைத் தரிசித்தல்

இச்சலுகைக்கு தகுதியானவர்கள்:

ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறுபட்ட துறைகளில் உள்ள ஆளுமைகளே இச்சலுகைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர், அந்த அடிப்படையில்:

பல்கலைக்கழகங்களினதும் கலாசாலைகளினதும் பணிப்பாளர்கள் மற்றும் அதன் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆளுமை மிக்க மாணவர்கள், பள்ளிவாயல்களின் இமாம்கள் ஹதீப்மார்கள், இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர்கள், சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள் பெற்றவர்கள், குர்ஆன் மற்றும் ஸுன்னாவோடு தொடர்பு பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள், ஊடகவியலாளர்கள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகள் போன்றவர்கள் குறித்த சலுகையில் உள்ளடங்குவார்கள்.

தகுதியானவர்களை தெரிவு செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

மேலே குறிப்பிடப்பட்டவர்களிலிருந்து ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள சவூதி அரேபியாவில் தூதரகம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை தெரிவு செய்து சவூதி அரேபியாவின் இஸ்லாமிய அலுவலர்கள் அமைச்சுக்கு ஒப்படைக்கும். அமைச்சின் ஒப்புதலுக்குப் பிறகு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும்.

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவிருக்கும் மன்னரின் ஹஜ் விருந்தாளிகள்

இம்முறை 90க்கும் அதிகமான உலக நாடுகளிலிருந்து 1300 ஹாஜிகள் சவுதி மன்னரின் ஹஜ் விருந்தாளியாக இவ்வருட ஹஜ் கடமையை மிக சொகுசாக நிறைவேற்ற உள்ளனர். அவர்களுள் 10 பேர் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை சவூதி மன்னரின் விருந்தாளிகளாக இலங்கையில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தெறிவு செய்யப்பட்ட 10 அதிஷ்டசாலிகளில் பெயர் பட்டியல் பின் வருமாறு:

1- Mohamed Rizwan Abdul Razak (Coordinator)

2- Aboobacker Rameez

3- Jamaldeen Mohamed Nizam

4- Mohamed Nazeer Mohamed Mafas

5- Mohamed Mowjood Mohamed Mufeez

6- Mohamed Ameen Mohamed Azzam

7- Mohamed Moosin Mohamed Sufain

8- Abdul Salam Mohammed

9- Packeer Mohideen Mohamed Cassim

10- Umar Lebbe Usanar Raheem.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...