கல்குடா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தவர்களை நினைவுகூர்ந்து பெயர்கள் அடங்கிய நினைவுத் தூபி ஒன்று சனியன்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி 233வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் கமல் டி சில்வா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரகுமார ஆகியோரும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.
இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நினைவுத் தூபியை திரைநீக்கம் செய்தனர்.
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களும் நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டுள்ளது.
பொலனறுவையில் இருந்து வருகை தந்த சிங்கள மக்கள் மற்றும் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் நினைவுத் தூபி திறப்பு நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.