வட்டியில்லா கல்வி கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தகுதியானவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதோடு, குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான மாணவர் கையேட்டைப் பரிசீலனை செய்து அனைத்து தகவல்களை பெற முடியும்.

அத்துடன் 070-3555970-79 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...