பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படும்?

Date:

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அந்த அந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், நுவரெலிய கல்வி வலயத்திலும் சில பாடசாலைகளுக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்த முடியாத நிலைமை இருப்பின், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக அதிபர்கள் கோட்ட கல்வி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கலாம் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...