பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம ரயில் நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதை நாளைய தினம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கரையோர மார்க்த்தின் பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம ரயில் நிலையத்துக்கும் இடையில் உள்ள மஸ்ஸல ரயில் கடவையின் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதி நாளை காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை மூடப்படவுள்ளது.
அதன்படி, இந்த மார்க்கம் மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.