மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மருத்துவப் பதிவேடுகளைப் பெற்ற பிறகு, அவர்கள் விரும்பும் வாகன வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ சான்றிதழ் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்கவின் கையொப்பத்துடன் புதிய சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தற்போது ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தை நெருங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.