இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் சந்திரயான் 3 விண்கலம்:நாளை விண்ணில் பாயும்

Date:

சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் சரியாக பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது.

25½ மணி நேர கவுண்ட் டவுன் நாளை பிற்பகலில் முடிந்ததும் சந்திரயான் 3 விணகலத்தின் நிலவுப் பயணம் தொடங்கிவிடும்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய உள்ளது.
இன்று தொடங்கியுள்ள கவுண்ட்டவுன் நாளை முடிவுக்கு வந்ததவுடன், அதாவது, சரியாக பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிய எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் விண்ணில் பாயும்.

எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டில் விண்கலத்தின் எல்லா பகுதிகளும் முழுமையாக பொருத்தப்பட்டு, அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டன. திட மறுறம் திரவ எரிபொருள் நிரப்புதல், பேட்டரி சார்ஜ் செய்தல் போன்ற கவுண்டவுன் நேரத்தில் கடைசி கட்ட பணிகள் நடைபெறும்.

எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் ‘புரபுல்சன்’ என்ற முக்கியப் பகுதியைக் கொண்டிருக்கிறது. இது விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதிகளை நிலவில் 100 கி.மீ. தொலைவு வரை கொண்டு செல்லக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லேண்டர் பகுதி தான் நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் பகுதி. ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் பகுதி. இந்த முக்கிய பகுதிகளுக்கு இடையே ரேடியோ அலைவரிசை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் ரூ.615 கோடியில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

ந்திரயான் 3 மூலமாக நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...