கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 4000 வீடுகள்!

Date:

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக 6 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு கே மாவத்தை, ஸ்டேடியம் தோட்டம், அப்பல்வத்தை, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இந்த வீட்டுத் தொகுதிகளை நிர்மாணித்து வரும் நகர அபிவிருத்தி அதிகார சபை, ஒரு வீடமைப்பு 550 சதுர அடி எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...