2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம்!

Date:

நாடளாவிய ரீதியில் 2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் கிராம சேவை மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுவதன் காரணமாக கிராம உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான அரச அதிகாரிகளாக காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆகவே, கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றமை அனைத்து விதமான அபிவிருத்தி செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தும். இதனால், புதிய நபர்களை விரைவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறல்லாத பட்சத்தில், கிராம உத்தியோகத்தராக செயற்பட விரும்பும் அரச அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...