தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

Date:

தமிழ்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரா.சம்பந்தனுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, இலங்கை தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள், தேசிய அடையாளங்கள், சீர்திருத்தங்கள், பொறுப்பு கூறல் மற்றும் நீதிக்கான விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக முன்னோக்கி பயணித்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...