புத்தளம் மதுருகம பகுதியில் தும்புத் தொழிற்சாலை அதனை அண்டிய காட்டுப் பகுதியில் பாரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தினால் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் ஒன்றும் தீக்கரையாகியதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான தேங்காய் மட்டைகள், தேங்காய் தும்பு ஆகியன தீக்கரையுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக விரைந்து தீப்பரவிய இடத்திற்கு நகரசபையின் தீயனைக்கும் படையினரும் தம்பபண்ணி கடற்படைத் தீயனைப்புப் படையினரும் கிராம மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீ இன்ஸி சிமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியில் இனந்தெரியாத எவராலும் தீ வைக்கப்பட்டுள்ளமையினால் குறித்த தீ காற்றில் பரவி தும்புத் தொழிற்சாலையில் தீ ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.