உலக கிண்ண ஸெபக்தக்ரோ வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (18) புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய வீரர்களை வரவேற்கும் நிகழ்வும் வீதி ஊர்வலமும் மாலை 4.00 மணி – 6.00 மணி வரை புத்தளம் நகர மத்தியில் நடைபெறும்.
Kumpulan De Malayu Puttalam மற்றும் Malay Sports Club இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
இவ்வீரர்களை வரவேற்கும் நிகழ்வு சிறுவர் பூங்காவிற்கு அருகில் சமய குருக்கள், அரச மற்றும் நிருவாகத்துறை அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து புத்தளம் நகர மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்து, அல்-குர்ஆன் நினைவு கோபுரத்தின் முன்னால் மக்கள் சந்திப்புக் கூட்டத்துடன் நிறைவுபெறும்.