இஸ்லாமிய புதுவருடம் புதிய நம்பிக்கைகளை எமக்கு அளிக்கின்றது: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Date:

ஹிஜ்ரி 1445, இஸ்லாமிய புத்தாண்டின் உதயமானது சமாதானம், நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்கான புதிய நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் எமக்கு அளிப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இச் சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

புத்த சமய மற்றும் கலாசார அமைச்சின் ஒத்துழைப்புடன் சவூதி அரேபிய தூதரகம் அண்மையில் நடாத்திய அல் குர்ஆன் மனனப் போட்டி, எமது இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல் உறவுகளை வளர்ப்பதற்கும், இஸ்லாமிய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறேன் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...