தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய பிரபல பாடகியிடம் விசாரணை: பிரதமர் உத்தரவு

Date:

தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல பாடகி ஒமாரியா சிங்கவன்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய ஒமாரியா சிங்கவன்சவிடம் இன்றைய தினம் (02) விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடரில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அரச நிர்வாக மற்றும் சுதேச விவகார அமைச்சிக்கு ஒமாரியா இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் எல்.பி.எல் டீ20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வின் போது ஒமாரியா தேசிய கீதத்தை பாடியிருந்தார்.

வித்தியாசமான முறையில் தீரிபுபடுதிய வகையில் தேசிய கீதத்தை பாடியதாக ஒமாரியா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அரச நிர்வாக  அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் ஓமாரியாவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள உள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...