சிறைக் கைதிகளின் உணவு தேவைக்காக வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபா செலவாகிறது!

Date:

சிறைக்கைதிகளின் உணவு தேவைக்காக மாத்திரம் வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், மேலதிக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க   தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும்  அண்மைக் காலமாக நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 29000 ஆக அதிகரித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கையின் 2 மடங்காகும்.

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்கும் நோக்கில் 20 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...