2023 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடக்க விழாவில் நாட்டின் தேசிய கீதத்தினை திரிபுபடுத்தி பாடியதற்காக பாடகி உமாரா சிங்கவங்ச மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2023 லங்கா பிரீமியர் லீக் (LPL) ஆரம்பமானது.
சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஒரு விழாவில் , நாட்டின் தேசிய கீதம் இலங்கை பாடகி உமார சிங்கவங்சவின் ஊடாக ஒபேரா முறையில் இசைக்கப்பட்டமையினால் அது பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கீதத்தின் பொருள் மற்றும் இசையினை மாற்றுவது அல்லது திரிவு படுத்துவது அரசியலமைப்பின் படி குற்றமாகும்.
இந்தநிலையில், சர்ச்சைக்குள்ளான பாடகி உமாரா சிங்கவன்ச குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரிடத்திலும் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஒரு போதும் நாட்டின் கீர்த்திக்கும் தேசிய கீதத்தின் பெருமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்த விரும்பியதில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பெருமையை பாதுகாப்பதற்கும் தேசிய கொடியை சுமப்பதற்கும் எப்போதும் பெருமைக்கொள்வதாக பாடகி உமாரா சிங்கவன்ச அறிக்கையொன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளார்.