“119 பொலிஸ் அவசர பிரிவு” மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

119 பொலிஸ் அவசர பிரிவுக்கு தவறான தகவல்களை வழங்கும் நபர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து வழங்க சட்ட விதிகள் உள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 3,000 – 3,500 அழைப்புகள் வருவதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் வரும் செய்திகளை ஆய்வு செய்யும் போது, ​​பொதுமக்கள் 119 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி தவறான தகவல்கள் அடங்கிய செய்திகளை அனுப்புவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மிகவும் முக்கியமான மற்றும் அவசரமாக செயற்படுத்தப்பட வேண்டிய தொலைபேசி செய்திகளை செயலாக்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இந்த எண்ணை தவறாக பயன்படுத்தாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பவங்கள் குறித்து முன்னுரிமை அளித்து தேவையான தகவல்களை மட்டும் தெரிவிக்க பயன்படுத்த வேண்டும் என காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவிக்கிறது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...