கொழும்பில் உள்ள இரண்டு பிரபல ஆண்கள் பாடசாலைகளுக்கு இடையில் நேற்று மாலை இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை வெஸ்லி கல்லூரிக்கும் மருதானை ஸாஹிரா கல்லூரிக்கும் இடையில் நேற்று மாலை வெள்ளவத்தை குரே பூங்காவில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதனால் மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.