கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீ பரவல்: 85 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

கந்தானை இரசாயன தொழிற்சாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால் வெளியேறிய புகை காரணமாக பாதிக்கப்பட்ட 85 மாணவிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தானை, தேவாலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த தொழிற்சாலையானது கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரிக்கு அருகாமையில்  அமைந்துள்ளதால் தீ விபத்தின் போது வெளியேறிய புகை காரணமாக  85 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 85 மாணவிகளும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  ராகம போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

கந்தானை இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...