நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை: பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்று இராஜினாமா?

Date:

பாகிஸ்தான் அரசியலுக்கு இன்று மிக முக்கியமான நாள். கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது அரசியல் ஸ்திரத்தனமை தொடர்பான பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் புதன்கிழமை தனது இராஜினாமாவை சமர்ப்பிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்குமாறு அதிபர் ஆரிஃப் அல்விக்கு புதன்கிழமை கடிதம் எழுத உள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.

ஷாபாஸ் ஷெரீப் தனது பதவியை இராஜினாமா செய்தால், இடைக்கால அரசாங்கம் நாட்டின் பொறுப்பை ஏற்கும்.

நாடாளுமன்ற கீழவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமரின் ஆலோசனையை அதிபர் அல்வி ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...