பாடசாலைகளின் நீர் கட்டணம் அதிகரிப்பு!

Date:

பாடசாலைகளின் நீர் கட்டணம் 900 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறு பணம் அறவிடுவது அசாதாரணமான ஓர் விடயம் எனவும், இந்த பணத்தை செலுத்த பெற்றோர் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேள்வி எழுப்பிய போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் 10,100 பாடசாலைகள் உள்ளன. பாடசாலை குடிநீர் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கை அரசு செலுத்துகிறது. நான்கில் மூன்று பங்கை குழந்தைகளின் பெற்றோர் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீர் கட்டண அதிகரிப்பின் மூலம் எனது பாடசாலையான நாரம்மல மயூரபாத வித்தியாலயத்திற்கு 1, 25000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நீங்கள் அந்த பாடசாலைக்கு 31, 250 ரூபாயை மாத்திரமே செலுத்துகிறீர்கள். மீதியை யார் கொடுப்பார்கள்? அமைச்சர் பணம் செலுத்துவதில்லை. அந்த சுமையை பெற்றோர் மீது சுமத்த வேண்டாம். மத ஸ்தலங்களிலும் இதே நிலைதான். இந்த நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

“பாடசாலைகளில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் நீரை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதைவிட அதிகமாக பயன்படுத்தப்படும் நீருக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நீரின் அளவு அதிகமாக இருந்தால், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த சுமை யாருக்கும் போகாது.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...