காதர் மஸ்தான் தலைமையில் கல்-எளிய அரபிக் கல்லூரியில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு!

Date:

குவைட் நாட்டின் பைதுஸ் ஸகாத் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் கள்-எலிய இஸ்லாமியப் பெண்கள் அரபுக் கல்லூரியில் சுமார் 95 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டிடமானது இன்று (12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்  கௌரவ காதர்  மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கள்-எலிய பெண்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர், கலாசாலை அதிபர், குவைட் நாட்டின் பைதுஸ் ஸகாத் நிறுவனத்தின் பணிப்பாளர், இலங்கைக்கான குவைத் தூதரக அதிகாரி,ISRC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...