இலங்கையில் ‘சினோபெக்’ ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

Date:

சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப். 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மேலும் இரண்டு சர்வதேச எரிபொருள் விநியோகஸ்தர்கள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்குள் செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறது என தெரிவித்தார்.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும், மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்ய முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...