எதிர்காலத்தில் அரச பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (23) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
5500 பட்டதாரி ஆசிரியர்களும், இரண்டாம் மொழி ஆசிரியர்களாக 2500 ஆசிரியர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.