எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பாக தடயவியல் தணிக்கை நடத்தப்படும்

Date:

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

“கேபிஎம்ஜி லிமிடெட், உள்ளூர் நிபுணர் நிறுவனம் தடயவியல் தணிக்கையை நடத்தும்,” என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த வருடம் இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் காணாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் அமரசேன தெரிவித்தார்.

“500 பெளசர்களில் இருந்த எரிபொருள் சேமிப்பிடம் இல்லாத இடத்தில் இறக்கப்பட்டது. ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிபிசியின் மூன்று அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தடயவியல் தணிக்கை மூலம் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...