முஸ்லிம் சமய திணைக்களம் துரித நடவடிக்கை!

Date:

குர்ஆன் மத்ரஸாக்களின் கற்றல்-கற்பித்தல் முறைகளைச் சீரமைப்பதில் முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் இவ்விடத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்துக்களைத் திரட்டுவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

பொதுவான பாடத்திட்டத்தின் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பதை இயக்க ரீதியான அமைப்புக்கள் முன்மொழிய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் மதரஸாக்களுக்குப் பொதுவான பாடத்திட்டம் தொடர்பில் இயக்க ரீதியான அமைப்புக்களின் கருத்துக்களை பெறுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகத்தில் திணைக்களம் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மீலாத் நிகழ்வினையடுத்து இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது.

Popular

More like this
Related

75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...