மிருகக்காட்சிசாலையில் விலங்குகளை குளிர்ச்சியாக வைக்க மழை..!

Date:

தற்போது நிலவும் வரட்சியின் காரணமாக தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் இயல்பு வாழ்க்கை அசௌகரியமாகியுள்ளது.

வரட்சியிலிருந்து விலங்குகளை பாதுகாக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

சிம்பன்சிகள், வங்கப்புலிகள், ஜாகுவார், கரடிகள் மற்றும் பல விலங்குகளின் கூண்டகளில் மழை போன்று தண்ணீரை பொழிய வைக்கும் குழாய்கள் மற்றும் ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலங்குகள் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக்க இந்த மழையின் கீழ் தங்குமிடம் தேடுவதை அடிக்கடி காணலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அங்குள்ள குளங்கள் பணியாட்களால் நிரப்பப்படுவதாகவும் இதனால் , மிருகக்காட்சிசாலையில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை.

“விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனினும் விலங்குகளின் நீர் உட்கொள்ளல் அதிகரித்துள்ளது. மேலும் சில பறவைகளுக்கு குளிர்ச்சியான காற்று வழங்குவதற்காக மின்விசிறிகள் மற்றும் ஸ்பிரிங்லர்களை நிறுவியுள்ளோம் என்றும் பிரேமகாந்த கூறினார்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...